Wednesday, June 4, 2008


தைவானில் பிறந்த இயக்குநர் ஆங் லீ (ANG LEE) இயக்கிய LUST,CAUTION படம் அவருடைய மற்ற படங்களை காட்டிலும் சிறந்ததாக கருதப்பட வேண்டும் என்று விமர்சர்கள் வைக்கும் கோரிக்கை படத்தை பார்க்கும்போது நியாயமாகத்தான் தெரிகிறது.

"நான் என் வாழ்க்கைய வீணடிச்சுட்டேன்.

என் கடைசி மூச்சு போவதற்குள் நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
நான் எப்போதும் உன்னை காதலித்துக்கொண்டே இருக்கின்றேன்.
நான் பேயாய் , ஆவியாய் மாறிக் கூட உன்னை காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நீ இல்லாம என்னால் தனியாய் சொர்க்கத்துக்கு கூட போக முடியாது. உன்னுடைய முழு மையான அன்பினாலே என்னால தனித்து அணுவளவும் இயங்க முடியாது.ஆகையால் உன் காலம் வரை நான் உன்னுடனேயே இருப்பேன்."


என்று காதலின் ஆழத்தை CROUCHING TIGER HIDDEN DRAGON-ல் உணர்த்திய தைவான் இயக்குநரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.


காரணம் என்னவெனில் ஒரு நாட்டின் கலாசாரம் பண்பாடு நாகரிகம் அனைத்தையும் அந்த நாட்டு மக்களோ அல்லது அறிஞர்களோ முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லாத நிலையில் வேறு ஒரு நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஒருவர் அந் நாட்டின் கலாசாரம், பண்பாடு மட்டுமில்லாமல் வரலாற்றையும் சேர்த்து படம் பிடித்து உலக அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறார் என்றால் அது சாதாரண விசயமாக எனக்கு படவில்லை.