1996 ஆம் ஆண்டு. நண்பரும் ஒளிப்பதிவாளருமான ராஜ்குமார் “காதல் கோட்டை“ படத்தில் ஒளிஓவியர் தங்கர்பச்சானுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு ஜெய்ப்பூர் செல்லத்தயாராக இருந்தார். நான் அப்போது Amrutanjan Ltd Group ஐ சேர்ந்த Amrut Leather and Footwear P Ltd. ல் வேலைசெய்து கொண்டிருந்தேன். நானும் ராஜ்குமாரும் நிறைய உலக சினிமாக்கள் பார்ப்போம். பேசிக்கொண்டிருப்போம். அவர் ‘Legends of the Fall’ படத்தைப் பற்றி குறிப்பிட்டு அந்த படம் வந்தால் கண்டிப்பாக பாருங்கள். அது ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது பெற்ற படம். John Toll ன் Lighting, Landscapes Visuals ஆகியவற்றை பார்த்து விட்டுதான் நடிகர் மெல் கிப்சன் தன்னுடைய ‘Brave heart’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதற்கு அழைத்தார் என்று கூறியவுடன் John Toll மேல் வியப்பேற்பட்டது. ஏற்கெனவே Vittorio Storaro, Freddie Young போன்றவர்களை வியந்து ரசித்துக்கொண்டிருந்ததால் இவருடைய ஒளிப்பதிவின் அழகையும் ரசிக்க வேண்டும் என்று ஆவல் மனதில் எழுந்தது. ராஜ்குமார் கிளம்பி ஜெய்ப்பூர் சென்ற சில நாட்களில் அப்படம் சத்யம் திரையரங்கில் வெளியாகியது. நான் Marketing வேலையாக வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு தனியாக சென்று அப்படத்தை பார்த்தேன். திரை முழுக்க என் மனம் வியாப்பித்திருந்தது. 1800களில் அமெரிக்கா எப்படி இருந்தது என்பதை யதார்த்தமாகவும் அழகியியல் ரீதியாகவும் கண்முன் கொண்டு வந்து அருமையான குடும்ப பிண்ணனியில் மனதை லயிக்க வைத்திருந்தார் John Toll.
படத்தில் ஒளிப்பதிவை மிக அற்புதமாக கையாண்டிருந்த John Toll-ஐ தனது படத்திற்கு பயன்படுத்திய இயக்குநர் யார் என்று இடைவேளையில் கண்ணாடிப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த வழுவழுப்பான போஸ்டாpல் பார்த்தேன். Ed Zwick என்று பெயர் போட்டிருந்தது. புதிய பெயராக இருந்தது. முழுப்பெயர் Edward Zwick.
ஒளிப்பதிவிற்காக படம் பார்க்கப்போய் படத்தின் கதையும் நெகிழ்வான சில நிகழ்வுகளும், Western என்று சொல்லப்படுகின்ற அமெரிக்க வரலாற்றின் பின்னணியும் மனதில் ஆழப்பதிந்தது. ராஜ்குமாரிடம் Ed Zwick இதற்கு முன் படம் ஏதாவது பண்ணியிருக்கிறாரா என்று கேட்க, அவர் தெரியவில்லை என்று கூறினார். Ed Zwick என் மனதிற்குள் வந்தபிறகு அவருடைய Courage under Fire, the Siege படங்கள் தியேட்டரில் வெளியாயின. ஆனால் பார்க்க முடியவில்லை. பிறகு The Last Samurai படம் 2003ல் வெளிவந்தது. இதில் Tom Cruise நடித்திருந்ததால் சென்னை மற்றும் தமிழகமெங்கும் சிறப்பாக விளம்பரம் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. நான் “ஈரநிலம்” படப்பிடிப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் என்னால் தியேட்டரில் சென்று பார்க்கமுடியவிலலை. 2003-2004களில் DVDகளின் ஆதிக்கம் அதிகரித்து தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது குறைந்தே போய்விட்டது. உலகின் அத்தனை மொழிப்படங்களும் பர்மா பஜாரில் வந்து இறங்கிவிடுகின்றன. மேலும் பஜார் தோழர்கள் அவற்றை திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் அவர்களின் இருப்பிடம் தேடி கொண்டுவந்து கொடுத்து காசு பார்த்தனர். உலக கிளாசிக் வகைப்படங்களை நான் தேடிப்பிடித்து வாங்கிகொண்டிருந்த போது எதேச்சையாய் DEFIANCE படம் கண்ணில் பட்டது. அட நம்ம Ed Zwick படமாச்சே... அதுவும் இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் படத்தை இயக்கியிருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப்பட்டு வாங்கினேன். ஹாலிவுட் இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் படம் இயக்கி அதை பத்திரிக்கைகளும், விமர்சர்களும் பாராட்ட வேண்டும் என்ற ஆசை இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை சிறப்பாகச் செய்தால்தான் தங்களை அமெரிக்க திரையுலகமே ‘முழுமையான இயக்குநர்’ என்று ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.