Sunday, April 15, 2012

Saturday, February 11, 2012

Thursday, January 26, 2012

TAKING CHANCE



இன்று இரண்டு படங்களை பார்க்க நேர்ந்த மகிழ்ச்சியை எப்படி பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை. இவ்வுலகில் மனித குலத்தின் ஆணிவேராக இயங்கிகொண்டிருப்பது மனிதநேயம்தான் என்பதை மறைமுகமாக எடுத்துக்காட்டிய திரைப்படங்களாக இவை இரண்டும் எனக்கு தோன்றின.

ஒன்று KEVIN BACON நடித்த TAKING CHANCE என்ற ஹாலிவுட் படம்.

மற்றது GETTING HOME என்ற சீனா படம்.

பல ஊர்களுக்கு பயணம் செய்வதும், பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதும் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கவேண்டிய அற்புதமான வாழ்க்கை அனுபவம் என்று எஸ்.இரா சொல்ல படித்திருக்கிறேன். நானும் வாய்ப்பு கிடைக்கும் போது புதிய இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதை வழக்கமாக கொள்ள முடிவெடுத்து ஓரிரு இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். இந்த பயணத்தில் ஏற்படும் அனுபவம் அலாதியானது. அதாவது எவ்வித நோக்கமுமின்றி பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவங்களைவிட ஏதாவது காரியத்திற்காக செல்லும் பயணம் மறக்க முடியாததாகி விடும்.

அப்படிப்பட்ட பயணத்தை பற்றிய கதைகள்தான் இந்த இரண்டு திரைப்படங்களிலும் இருக்கிறது என்பதோடு மட்டுமன்றி இரண்டுபடங்களிலும் கதாநாயகன் ஒருவனைத்தவிர மற்றவர்கள் எல்லாம் பயணத்தின் ஊடே வந்துபோகும் கதாபாத்திரங்கள் என்பதை அறிந்து ஆச்சர்யமடைந்தேன். இரண்டு படங்களும் ஒன்றுகொன்று நேரெதிரான வெவ்வேறான தளங்களில் இயங்குவதை கண்டு அதிர்ச்சியும் அடைந்தேன். அவர்களுக்குதான் இப்படி எத்தனை விதமான கதைகள். நம்மிடம் பல அற்புதமான கதைகளிலிருந்தும் திரைப்படங்களாக்க முடியவில்லையே?

இரண்டு திரைப்படங்களிலும் நாயகன் இறந்து போன சக மனிதனை ஒரு ஊரிலிருந்து அவனின் சொந்த ஊருக்கு அடக்கம் செய்வதற்கு எடுத்துச்செல்லும் பயணமும், வழிநெடுக அவன் சந்திக்கும் மனிதர்களின் மாந்தநேய பண்புகளும் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒவ்வொரு காட்சியும் நெகிழ்வை ஏற்படுத்தியது.

முதலில் TAKING CHANCE.


U.S. MARINE CORPORATION DEPARTMENT-ல் உயர் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருக்கும் LT COL MICHAEL R. STROBL (KEVIN BACON) ஈராக்கில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தால் நிறைய அமெரிக்க வீரர்கள் உயரிழப்பது கண்டு வேதனை அடைகிறான். தினமும் அவனுடைய MILITARY DEPT WEBSITE ல் வெளியாகும் CASUALITIES பற்றி பார்த்துவிட்டு நிம்மதியாக உறங்கமுடியாமல் தவிக்கிறான்.


2004 வருடம் ஈராக் போரில் இறந்து போன ராணுவ வீரர்கள் சிலரின் உடல் ஜெர்மனி வழியாக DELAWARE விலுள்ள DOVER AIRFORCE BASEக்கு வருகிறது. DOVER PORT MORTUARY அலுவலகத்தில் அனைத்து உடல்களும் சுத்தம் செய்யப்பட்டு, ராணுவச்சீருடை அணிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களுக்கும், இறந்து போன ஒவ்வொரு வீரனுக்கும் ஒரு ராணுவ வீரரின் பாதுகாப்பு மற்றும் ராணுவ மரியாதையுடன் (MILITARY ESCORT) அனுப்பி வைக்கப்படுகிறது.

இறந்து போனவர்களின் பட்டியலில் புதிதாக COLORADOமாநிலத்திலுள்ள CLIFTON நகரைச் சேர்ந்த CHANCE PHELPS என்ற ராணுவ வீரன் பெயரும் இருப்பதை பார்க்கிறார். அவன் 20வயதிலேயே இறந்து போயிருக்கிறான். அது STROBL-ன் சொந்த ஊராகும். தனது ஊரிலிருந்து வந்து இளைய வயதிலேயே இறந்து போயிருக்கும் அவனுக்கு மரியாதை செலுத்த நினைக்கிறார். அந்த ராணுவ வீரனின் அடக்கத்திற்கு தான் ராணுவபாதுகாப்பு அளிக்கிறேன் என்று தனது மேலதிகாரியிடம் அனுமதி கேட்கிறார். அது வழக்கத்தில் இல்லாததாலும் சாதாரண ஒரு ராணுவ வீரனே இது போன்ற ESCORT DUTYயில் இதுவரை ஈடுபட்டு வந்ததாலும் அவர் ஆச்சர்யமடைகிறார். பிறகு அவர் விருப்பத்தின் பேரில் அனுமதியளிக்கிறார்.


முதலில் அவருக்கு அந்த ராணுவ வீரனைப்பற்றிய குறிப்புகள் வழங்கப்படுகிறது. அவனுடைய அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட்டதால் தற்போது அந்த உடல் DUBOIS மாநிலத்திலுள்ள WYOMING நகருக்கு கொண்டுச்செல்லப்படவேண்டும் என்றும், முதலில் PHILADELPHIA AIRPORTலிருந்து MINNEAPOLIS செல்லவேண்டும். பிறகு அங்கிருந்து இன்னொரு FLIGHT மாறி BILLINGS செல்லவேண்டும். அங்கிருந்து காரில் WYOMING என்று கூறி அவருக்கான விமான டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு அமெரிக்க கொடிகள் கொடுக்கப்பட்டு ஒன்று தந்தைக்கும் மற்றது தாய்க்கும் தனித்தனியே வழங்கப்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ராணுவ வீரர்கள் SALUTE செய்து மரியாதை செலுத்த காரில் STROBL-ன் பயணம் ஆரம்பிக்கிறது. இந்த நீண்ட பயணம்தான் படத்தின் திரைக்கதையாக இருப்பதால் (நீங்களும் படத்தை பார்க்கவேண்டும் என்பதாலும்) இரண்டு காட்சிகளை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

PHILADELPHIA விமானநிலையத்தில் காவலாளிகள் பயணிகளை சோதனை செய்து உள்ளே அனுப்பிகொண்டிருக்கும் போது STROBL-ன் முறை வருகிறது. அவர் தனது LUGGAGEகளை SCANNING MACHINE-ல் வைத்துவிட்டு கையில் வைத்திருக்கும் VELVETTE துணிப்பையை கையோடு கொண்டுச்செல்கிறார். அதில் இறந்து போன வீரனின் வாட்ச்,ராணுவ பேட்ஜ்,சிலுவை சுமந்த செயின் இருக்கிறது. காவலாளி அதையும் SCANNING MACHINE-ல் வைக்கவேண்டும் என்று கூற, இவர் X-RAY ஆல் SCAN பண்ணக்கூடாது என்று மறுத்துவிடுகிறார். காவலாளி சற்று கோபமடைந்து அவருடைய ராணுவ உடையில் இருக்கும் மெடல்களையும் சேர்த்து சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அதையும் கழட்டச்சொல்கிறான். அவர் முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிடுகிறார். பிறகு என்னை தனியறையில் வேண்டுமானால் சோதனை செய்து கொள்ளுங்கள் நான் இந்த உடையை கழட்ட முடியாது என்று கூறிவிடுகிறார். அவன் யோசித்துவிட்டு பிறகு தனியறையில் அவரை அழைத்துச்சென்று சோதனை செய்து அனுப்புகிறான்.


ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக இறந்து போன ஒரு வீரனுக்கு அவமானம் ஏற்படுவதை தடுத்ததோடு மட்டுமன்றி சேர்ந்த தனக்கும் மரியாதை குறைவு ஏற்படக்கூடாது என்ற உறுதியை கடைசி வரை STROBL காப்பாற்றி கண்ணியமாக நடந்து கொள்வதை பார்க்கும் போது அட! என்று சொல்லத்தோன்றியது.

மற்றொரு காட்சி.

WYOMING மாநிலத்தில் DUBOIS நகரை நோக்கி ஒரு காரில் STROBL ம் மற்றொரு காரில் ராணுவ வீரனின் சவப்பெட்டியுடனும் அங்கிருக்கும் ராணுவ அதிகாரியும் நெடுந்தொலைவு பயணிக்கிறார்கள். இவர்கள் பின்னாடி வந்த CONTAINER LORRY ஒன்று முந்திச்செல்லும் போது ராணுவவீரன் அடக்கம் செய்யப்பட செல்லும் காரை பார்த்துவிட்டு தனது தலையிலிருந்து தொப்பியை கழற்றி, HEAD LIGHTON செய்து மரியாதை செய்கிறார். மேலும் சிறிது தூரம் செல்லச்செல்ல பின்னாடி வந்த அனைத்து கார்களும் அதே போல HEAD LIGHTON செய்து ஒன்றன் பின் ஒன்றாக இறுதி ஊர்வலம் செல்வதைப்போல் வரிசையாக அணிவகுத்துச் சென்று மரியாதை செய்துவிட்டு தங்களின் பாதையில் சென்றுவிடுகின்றன.

என்னே மரியாதை! என்னே மரியாதை!

இங்கும்தான் இருக்கிறார்களே? மக்களுக்கு யார் ராணுவ வீரன் என்று தெரியாது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் தெரியாது. ராணுவ வீரர்களுக்கும் மக்களைப்பற்றி அக்கறையே கிடையாது. இலங்கை ராணுவம் நமது மீனவர்களை எவ்வளவுதான் சுட்டுக்கொன்று கொடுமைப்படுத்தினாலும் இவர்கள் தூங்கு மூஞ்சிகளாகவே கடலில் வலம் வந்து கொண்டு இருப்பார்கள்.

அவமானம்.

கண்டிப்பாக திரைப்படத்தை நீங்களும் பாருங்கள். மனிதநேயத்தின் மூலம் தேசப்பற்றை உணர்வீர்கள்.